உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதிதாக கட்டிய பாலம் 4 மாதத்தில் டமால்

புதிதாக கட்டிய பாலம் 4 மாதத்தில் டமால்

பொள்ளாச்சி : கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே, ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்தில், ஐந்து கால்வாய் வழியாக, 6,400 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. அதில், காரப்பட்டி கால்வாயில் உள்ள பாலம் சேதமடைந்து காணப்பட்டது.விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைக்கு பின், காரப்பட்டி கால்வாயில், தென்கரை பாலம் அருகே, 1.56 கோடி ரூபாய் செலவில், புதிய பாலம் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.ஓடையின் குறுக்கே பாலம் கட்டுதல் மற்றும் காரப்பட்டி கால்வாய், 4.120 கி.மீ. உள்ள நீர் வழி பாலத்தில் சிறப்பு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த ராஜலட்சுமி கன்ஸ்ட்ரக் ஷன் என்ற நிறுவனம் இப்பணியை மேற்கொண்டது.பணி முடிந்து நான்கு மாதங்கள் கூட ஆகாத நிலையில், பாலத்தின் பக்கவாட்டு சுவர் சேதமடைந்து சரிந்தது. இதனால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துஉள்ளனர்.நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'காரப்பட்டி கால்வாய் பாலப்பணிகள் தரமாகத் தான் மேற்கொள்ளப்பட்டது.'தண்ணீர் நிறுத்தும் போது, கால்வாயை சேதப்படுத்துகின்றனர். இதனால், தண்ணீர் திறக்கும்போது கசிவு ஏற்பட்டு, சுவர் இடிந்திருக்கலாம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Venkataraman
ஏப் 17, 2024 09:53

பாலத்திற்கு கோடி செலவில், வெறும் லட்சம் மட்டுமே செலவாகியிருக்கும்


ராம்கி
ஏப் 12, 2024 07:45

நீர்வளத்துறை அதிகாரிகளின் பதில் சரியில்லை ஏன் என்றால் அவர்கள்தான் பணி தரமான முறையில் கட்டப்பட்டுள்ளது என்று சான்றலித்து உள்ளனர் மக்களின் வரிப்பணம் வீனடிக்கப்பட்டு உள்ளதை மறைக்கப் பார்க்கின்றனர் சட்டப்படி நடவடிக்கை எடுத்து ஒப்பந்ததாரர் மற்றும் அரசு அதிகாரிகள்மேல் நடவடிக்கை எடுத்து தண்டனை தரவேண்டும்


Jeganathan
ஏப் 11, 2024 08:01

இதற்கு பெயர் தான் திராவிட மாடல் விடியா அரசு


VENKATASUBRAMANIAN
ஏப் 10, 2024 10:24

இதுதான் திராவிட மாடல்


N SASIKUMAR YADHAV
ஏப் 10, 2024 09:04

கூட்டு கொள்ளையனுங்க. பாலம் கட்ட கொடுத்தபணத்தில் பாதியை ஆட்டய போட்டதை பொதுவில் சொல்லமுடியுமா. வாக்காளர்களாகிய பொதுமக்கள் எப்போது இலவசங்களையும் பணத்தையும் வாங்காமல் ஓட்டுப்போடுகிறார்களோ அப்போதுதான் இதுபோன்ற ஆட்களுக்கு தூக்குதண்டனை கொடுக்க முடியும்


RAMESH
ஏப் 10, 2024 08:58

திராவிட மாடல் ஆட்சியின் அவலம்


பேசும் தமிழன்
ஏப் 10, 2024 08:43

எத்தனை சதவீதம் கமிசன் வாங்கி கொண்டு இந்த பாலத்தை கட்டினார்களோ.... நான்கு மாதங்கள் கூட தாக்குபிடிக்கவில்லை.... இது தான் விடியா ஆட்சியின் இலட்சணம் ???


Indhuindian
ஏப் 10, 2024 08:14

திராவிட மாடல் ஆட்சியிலே எதுவுமே யூஸ் அண்ட் த்ரோ தான் அது பாலமா இருக்கட்டும் கொள்கையா இருக்கட்டும்


Prabakaran VK
ஏப் 10, 2024 08:10

திராவிட மாடல் இப்படித்தான் இருக்கும்


Mani . V
ஏப் 10, 2024 04:41

எழவு மாடல் ஆட்சியின் சாதனை


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி