உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேசிய டென்னிஸ் போட்டிக்கு  நிர்மல மாதா மாணவர் தேர்வு 

தேசிய டென்னிஸ் போட்டிக்கு  நிர்மல மாதா மாணவர் தேர்வு 

கோவை : சென்னையில் நடந்த மண்டல அளவிலான டென்னிஸ் போட்டியில், நிர்மல மாதா பள்ளி மாணவர் வென்று, தேசிய போட்டிக்கு தேர்வானார்.சி.ஐ.எஸ்.சி.இ., பள்ளி மாணவர்களுக்கான, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல அளவிலான லான் டென்னிஸ் போட்டி, சென்னை செயின்ட் மைக்கேல் அகாடமியில் நடந்தது. இதில் சி.ஐ.எஸ்.சி.இ., பள்ளிகளை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் பங்கேற்ற, வெள்ளலுார் நிர்மல மாதா கான்வென்ட் ஐ.சி.எஸ்.சி., பள்ளி மாணவர் ஆலன், சிறப்பாக விளையாடி இரண்டாம் இடம் பிடித்தார். இதன் மூலம், கோல்கட்டாவில் நடக்கவுள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க, தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பெற்ற மாணவரை பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி