மேலும் செய்திகள்
டிப்பர் லாரி மோதி முதியவர் உயிரிழப்பு
09-Aug-2024
கோவை;முகூர்த்த நாட்கள் இல்லாததால், பூமார்க்கெட்டில் உதிரிப்பூக்கள் விலை குறைந்துள்ளது.கோவை பூமார்க்கெட்டுக்கு, ஊட்டி, கோபி, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், திண்டுக்கல் மற்றும் நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, தினமும் உதிரிப்பூக்கள் விற்பனை கொண்டு வரப்படுகிறது.இந்த மாதம் திருமண முகூர்த்தம் மற்றும் விசேஷ நாட்கள் குறைவாக இருப்பதால், உதிரிப்பூக்கள் விலை குறைந்துள்ளது. நேற்று மல்லி கிலோ 400 ரூபாய்க்கும், முல்லை 240 ரூபாய்க்கும், செவ்வந்தி, அரளி மற்றும் ரோஸ் கிலோ 120 ரூபாய்க்கும் விற்பனையானது.பூ வியாபாரிகள் கூறுகையில், 'இந்த மாதம் முகூர்த்த நாட்கள் அதிகமில்லை. இனி விநாயகர் சதுர்த்திக்குதான் பூ விலை அதிகரிக்கும்' என்றனர்.
09-Aug-2024