உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நொய்யல் நதியை மீட்க நடைப்பயணம்

நொய்யல் நதியை மீட்க நடைப்பயணம்

கோவை : நொய்யல் நதியை மீட்டெடுக்கும் முயற்சியாக, நொய்யலாறு அறக்கட்டளை நாளை நடைப்பயணத்தை நடத்துகிறது. நொய்யல் நதி துவங்கும் சாடிவயலில், காலை 6:00 மணிக்கு இந்த நடைப்பயணம் துவங்குகிறது. பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சுவாமி அஜித் சைத்தன்யா மற்றும் நொய்யலாறு அறக்கட்டளை உறுப்பினர்களும், நொய்யல் பகுதி, கிளைநதி, வாய்க்கால் பகுதி பக்கம் உள்ள இயற்கை ஆர்வலர்களும், கலந்து கொள்ள உள்ளனர்.கோவை சாடிவயலில் இருந்து, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டம் நொய்யல் கிராமம் வரை, இந்த நடைப்பயணம் நடக்கிறது.இந்த நடைப்பயணத்தில், அந்தந்த பகுதி மக்கள் இணைந்து, அவரவர் பகுதியில் இருக்கும் பிரச்னைகளை, நொய்யல் ஆறு அறக்கட்டளையினரிடம் தெரிவிக்கலாம்.பிரச்னைகளை அரசுக்கு ஆவணப்படுத்தி, நிவர்த்தி செய்ய முயற்சி எடுக்கப்படும் என்றும், நொய்யல் அறக்கட்டளையினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை