உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / செவிலியர் தின கொண்டாட்டம்

செவிலியர் தின கொண்டாட்டம்

கோவை;சேரன் செவிலியர் கல்லுாரியில், சர்வதேச செவிலியர் வாரம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல்வேறு விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்வுகள் அடங்கிய மூன்று நாள் நிகழ்வையும், 'எங்கள் செவிலியர்கள் நமது எதிர்காலம், பாதுகாப்புக்கான பொருளாதார சக்தி' என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட சமூக நலத்திட்டமும் நடத்தப்பட்டது.புளோரன்ஸ் நைட்டிங்கேல் படத்துக்கு, மலர் துாவி அஞ்சலி செலுத்தி, விழா துவங்கப்பட்டது. மெகந்தி, தீயில்லா சமையல், ரங்கோலி மற்றும் கிரிக்கெட், கபடி மற்றும் கால்பந்து போன்ற விளையாட்டுகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு, ஈ.எஸ்.ஐ., மருத்துவமனையின் ஓய்வுபெற்ற செவிலியர் தங்கமணி, விருது வழங்கி கவுரவித்தார். சேரன் செவிலியர் கல்லுாரி முதல்வர் டாக்டர் மீனாகுமாரி மற்றும் டாக்டர் மகாலட்சுமி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை