| ADDED : மார் 25, 2024 12:13 AM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி பகுதியில் உள்ள தேவாலயங்களில், குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது.குருத்து ஞாயிறு அல்லது குருத்தோலை ஞாயிறு என்பது இயேசு கிறிஸ்து ஜெருசலம் நகருக்குள் வெற்றி ஆர்ப்பரிப்போடு நுழைந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்கள், ஆண்டுதோறும் குருத்து ஞாயிறு அனுசரிக்கின்றனர். பாடுகளின் குருத்து ஞாயிறு என்றும் அழைக்கப்படுகிறது.அதன்படி பொள்ளாச்சி புனித லுார்து அன்னை ஆலய பங்கு தந்தை ரெவரன்ட் பாதர் ஜேக்கப் அடிகளார் தலைமையில், புனித லுார்து அன்னை ஆங்கில பள்ளி வளாகத்தில் இருந்து அருகில் உள்ள புனித லுார்து அன்னை ஆலயம் வரை கத்தோலிக்க கிறிஸ்து மககள், தங்களது கைகளில் குருத்தோலைகளை கைகளில் ஏந்தி குருவானவர் முன்னே சென்றார்.பக்தர்கள், அனைவரும் பக்தி பாடல்களை பாடிக்கொண்டே பவனியாக ஆலயத்துக்கு சென்றனர்.பின்னர், ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு பிரார்த்தனை, ஆராதனை வழிபாடுகள் நடைபெற்றன. இதில், பங்கேற்ற அனைவரும் தவ முயற்சிகளையும், உபவாசமும் மேற்கொண்டனர். பங்கு குரு, அனைவருக்கும் ஆசீர் வழங்கினார்.இந்த வாரம் புனித வாரமாக, நேற்று முதல், 31ம் தேதி வரை (பாதம் கழுவும் சடங்கு, சிலுவைப்பாதை, இயேசு மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுதல் நிகழ்ச்சி) அனுசரிக்கப்படுகிறது.புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை வரை அனைத்து நாட்களிலும் சிறப்பு ஆராதனை வழிபாடுகள் நடக்கிறது. புனித வெள்ளியையொட்டி மகாலிங்கபுரம் இந்திரா நகர் சி.எஸ்.ஐ., ஆலயம் சார்பில், குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நிகழ்ச்சி நடந்தது.