உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடிநீர் பிரச்னை அலுவலர்கள் ஆய்வு 

குடிநீர் பிரச்னை அலுவலர்கள் ஆய்வு 

உடுமலை;குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்டது விருகல்பட்டி ஊராட்சி. ஊராட்சிக்குட்பட்ட விருகல்பட்டி, பழையூர், திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்டத்திலும், உள்ளூர் நீராதாரமான போர்வெல் தண்ணீரும், கிராமத்துக்கு வினியோகிக்கப்படவில்லை.குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட மக்கள், கடந்த, 2ம் தேதி, குடிமங்கலம் ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.'பிரச்னைக்கு தீர்வு காணப்படும்; உள்ளூர் நீராதாரமான போர்வெல் உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்,' என ஒன்றிய அதிகாரிகள் உறுதியளித்தனர்.அதன்படி, துணை வட்டார வளர்ச்சிஅலுவலர் செல்வக்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் விருகல்பட்டி, பழையூர் உள்ளிட்ட கிராமங்களில், மேல்நிலைத்தொட்டி மற்றும் குடிநீர் வினியோகம் குறித்து நேரடி ஆய்வு செய்தனர்.மக்களிடம் குறைகளை கேட்டறிந்த அலுவலர்கள் பிரச்னைக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்