| ADDED : ஜூன் 26, 2024 01:55 AM
கோவை:தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சுப்பணி அலுவலர் சங்கம் சார்பில், மாநில பொதுக்குழு கூட்டம், நிர்வாகிகள் பணி நிறைவு பாராட்டு விழா, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.விழாவில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும். அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு தொழில் வரி ரத்து செய்ய வேண்டும். அமைச்சு பணியாளர்களுக்கு முறையாக கலந்தாய்வு நடத்தி பணி மாறுதல் வழங்க வேண்டும். குறித்த காலத்தில் பதவி உயர்வு வழங்க வேண்டும்.பணியின் போது மரண மடையும் அரசு அலுவலர்களுக்கு, ரூ.10 லட்சம் கருணை தொகை வழங்க வேண்டும். பொங்கல் போனஸ் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.ஒப்பந்த ஊழியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேணடும்.இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள் பதவியேற்பு
விழாவில், சங்கத்தின் புதிய மாநில தலைவராக தேசிங்குராஜன், மாநில பொது செயலாளராக முத்து ரமேஷ், மாநில பொருளாளராக பார்த்த சாரதி உட்பட, 28 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்று கொண்டனர்.