உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தனியார் பஸ் மோதியதில், ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்

தனியார் பஸ் மோதியதில், ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்

கோவை:காரமடையில் அதிவேகமாக வந்த தனியார் பஸ் மோதியதில், ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று, காரமடை அருகே அதிவேகமாக வந்தது. அப்போது தனியார் திருமண மண்டபம் அருகே சாலையோரமாக நின்று கொண்டிருந்த முட்டை லாரி மற்றும் ஸ்கூட்டர் வாகனத்தின் மீது மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் லாரியில் இருந்து, அங்கிருந்த மளிகை கடைக்கு முட்டை ஏற்றிக் கொண்டிருந்த ஜடையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகன், 52, சம்பவ இடத்திலேயே பலியானார். ஸ்கூட்டரில் இருந்த புங்கம்பாளையத்தை சேர்ந்த பூபால், 29, படுகாயம் அடைந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த காரமடை போலீசார், இறந்தவரின் உடலை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தனியார் பஸ் ஓட்டுநர் விக்னேஷ் என்பவரை இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.இதனிடையே இந்த விபத்து தொடர்பான சி.சி.டி.வி., காட்சிகள் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை