உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊட்டி மலை ரயில் 22ம் தேதி வரை ரத்து

ஊட்டி மலை ரயில் 22ம் தேதி வரை ரத்து

மேட்டுப்பாளையம்:குன்னூர் மலை பகுதியில் பெய்து வரும் மழையால், வரும் 22ம் தேதி வரை ஊட்டி மலை ரயில், ரத்து செய்யப்பட்டுள்ளதாக, தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து, தினமும் ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்படுகிறது. குன்னூர் மலைப்பகுதியில் கனமழை பெய்ததால், அடர்லிக்கும் ஹில்குரோவுக்கும் இடையே, ரயில் பாதையில் மண், மரங்கள், பாறைகள் சரிந்து விழுந்தன. இந்த மண் சரிவை சரி செய்ய, 15ம் தேதி வரை மலை ரயில் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், குன்னூர் மலைப்பகுதியில், தொடர்ந்து மழை பெய்து வருவதால், பயணிகளின் பாதுகாப்பு கருதி வரும் 22ம் தேதி வரை, மலை ரயில் ரத்து செய்யப்படுகிறது. குன்னூரில் இருந்து ஊட்டிக்கு வழக்கம் போல், மலை ரயில் இயக்கப்படும் என, தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை