உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊட்டி மலைரயில் மீண்டும் ஓடத் துவங்கியது

ஊட்டி மலைரயில் மீண்டும் ஓடத் துவங்கியது

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில், நேற்று முதல் மீண்டும் ஓடத் துவங்கியது.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து, ஊட்டிக்கு தினமும் மலை ரயில் இயக்கப்படுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். குன்னூர் மலைப்பகுதியில் கடந்த மாதம்,1ம் தேதி பெய்த கனமழையால், அடர்லி ஹில்குரோவ் இடையே ஏராளமான இடங்களில், மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தன.அதனால் மலைரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் நடைபெறுவதை அடுத்து, 31ம் தேதி வரை ஊட்டி மலைரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. ரயில்பாதை சீரமைத்ததை அடுத்து, மீண்டும் ஊட்டி மலை ரயில் நேற்று முதல் ஓடத் துவங்கியது.நேற்று காலை, 7:10 மணிக்கு, 180 பயணிகளுடன், மேட்டுப்பாளையத்தில் இருந்து, மலை ரயில் ஊட்டிக்கு புறப்பட்டு சென்றது. ஒரு மாதத்திற்கு பிறகு மலை ரயில் ஊட்டிக்கு இயக்கப்பட்டதால், ரயிலில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ