உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊட்டி மலர் கண்காட்சிக்கு 40 சிறப்பு பஸ்கள் இயக்கம்

ஊட்டி மலர் கண்காட்சிக்கு 40 சிறப்பு பஸ்கள் இயக்கம்

பொள்ளாச்சி:ஊட்டியில் வரும் 10ம் தேதி மலர் கண்காட்சி துவங்க உள்ளதால்,தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக்கழகம் கோவையிலிருந்து சிறப்பு பஸ்களை இயக்குகிறது.கோவை மாவட்டத்தின் அருகில் உள்ள ஊட்டிக்கு, கோடை விடுமுறையில் குடும்பத்துடன் அதிகளவிலான மக்கள் செல்கின்றனர். இதனால், ஊட்டி, குன்னுார் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா வருகின்றனர். இதனால், மாவட்ட நிர்வாகம், இ-பாஸ் முறையை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்நிலையில்,கோவை - மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபாகோவில் அரசு போக்குவரத்துக் கழகம் எதிரிலுள்ள பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று முதல் மலர் கண்காட்சிக்கு, ஊட்டிக்கு 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.பெரும்பாலான பயணியர் இ-பாஸ் கெடுபிடிகளிலிருந்து தப்பிக்க பஸ்சில் செல்வர். இதனால், அதிக எண்ணிக்கையிலான பயணியர் செல்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி