உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடிநீர் சுத்திகரிப்பு பழுது இழப்பீடு வழங்க உத்தரவு

குடிநீர் சுத்திகரிப்பு பழுது இழப்பீடு வழங்க உத்தரவு

கோவை,:குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் பழுதானதால், இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. கவுண்டம்பாளையம், ராமசாமி நகரை சேர்ந்த பொன்னுச்சாமி, ஆர்.எஸ்.புரத்திலுள்ள 'யுரேகா பார்ப்ஸ்' என்ற நிறுவனத்தில், 2021, டிச., 24ல், குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் 14,740 ரூபாய்க்கு வாங்கினார்.அவற்றை பராமரிக்க, ஆண்டு கட்டணம் 2,212 ரூபாய் தனியாக செலுத்தினார். எந்திரம் வாங்கிய ஒன்றரை ஆண்டில் பழுதடைந்ததால், இலவசமாக சர்வீஸ் செய்து தருமாறு, விற்பனை நிறுவன மேலாளருக்கு தெரிவித்தார். இதற்கு தனியாக கட்டணம் கேட்டனர். பாதிக்கப்பட்ட பொன்னுச்சாமி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல், 'குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை, நல்ல நிலையில் இயங்கும் வகையில், இலவசமாக சர்வீஸ் செய்து கொடுப்பதோடு, இழப்பீடாக, 7,000 ரூபாய், செலவு தொகை, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ