உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓ.டி.பி., சொல்ல மாட்டீங்கிறாங்க ஆசிரியர்கள் புலம்பல்

ஓ.டி.பி., சொல்ல மாட்டீங்கிறாங்க ஆசிரியர்கள் புலம்பல்

கோவை:கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோரின் செல்போன் எண் சரிபார்க்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், பெரும்பாலான பெற்றோர் ஓ.டி.பி., கூற மறுப்பது ஆசிரியர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.மாநிலம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் செல்போன் எண்கள் எமிஸ் தளத்தில் பராமரிக்கப்படுகின்றன. அரசின் நலத்திட்டங்கள், அறிவிப்புகள் மற்றும் உதவித் தொகை, மாணவர்களின் வருகைப் பதிவு உள்ளிட்டவை குறித்து பெற்றோருக்கு எளிதில் தெரிவிக்கும் வகையில் புதிய தளத்தை உருவாக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.இதைத்தொடர்ந்து, பள்ளி மாணவர்களின் செல்போன் எண்கள் ஓ.டி.பி., மூலம் சரிபார்க்கும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இதுகுறித்து, அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ''ஓ.டி.பி., கேட்பதற்காக பெற்றோரின் செல்போன் எண்ணுக்குத் தொடர்பு கொள்ளும்போது, வங்கியில் இருந்து பணம் மோசடி செய்வதற்காக கேட்பதாக எண்ணி ஓ.டி.பி.,யை கூற மறுக்கின்றனர். சில பெற்றோருக்கு ஓ.டி.பி., எண்ணை சரியாக கூறத் தெரிவதில்லை. தொடர்ந்து செல்போன் எண் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. ''பள்ளி திறப்புக்குப் பின்னர் பெற்றோரை பள்ளிக்கே நேரடியாக வரவழைத்து எண் சரிபார்க்கப்பட்டு பதிவு செய்யப்படும்,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை