உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆட்டம் காணும் மேல்நிலை குடிநீர் தொட்டி; அசம்பாவிதம் நடக்கும் முன் அகற்றுவது அவசியம்

ஆட்டம் காணும் மேல்நிலை குடிநீர் தொட்டி; அசம்பாவிதம் நடக்கும் முன் அகற்றுவது அவசியம்

பெ.நா.பாளையம் : நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட ராக்கிபாளையத்தில் பழுதடைந்த மேல்நிலைத் தொட்டியை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட, 15வது வார்டு ராக்கிபாளையத்தில் பிள்ளையார் கோவில் வீதியில், பழைய மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. பயன்பாடு இல்லாமல் பழுதடைந்த நிலையில் உள்ள இத்தொட்டியை அசம்பாவிதம் எதுவும் நடப்பதற்கு முன், உடனடியாக அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, நரசிம்மநாயக்கன்பாளையம் அ.தி.மு.க., நகர தலைவர் முத்துசாமி, முன்னாள் கவுன்சிலர் கனகராஜ் உள்ளிட்டோர் கூறுகையில், 'பழுதடைந்த நிலையில் உள்ள இத்தொட்டிக்கு பதிலாக அருகே ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி, சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டது. தற்போது, அத்தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. புதிய தொட்டி அருகே உள்ள பழைய மேல்நிலைத் தொட்டி கான்கிரீட் தூண்கள் பழுதாகி, இடிந்து விழும் நிலையில் உள்ளது. அசம்பாவிதம் நடப்பதற்கு முன் உடனடியாக தொட்டியை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி நிர்வாகம் இடித்து அகற்ற வேண்டும்.அந்த இடத்தில் கீழ்நிலை தொட்டியை கட்டி குடிநீரை தேக்கி வைத்து, 15வது வார்டு மட்டுமல்லாமல், 16, 17வது வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கும் தாராளமாக குடிநீர் வினியோகம் செய்ய இயலும்.இது குறித்து, நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி