உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாகனத்தில் ஓவர் லோடு ஓட்டுநர்கள் தடுமாற்றம்

வாகனத்தில் ஓவர் லோடு ஓட்டுநர்கள் தடுமாற்றம்

நெகமம்:நெகமம் ரோட்டில், அதிக அளவு சோளத்தட்டை வாகனங்களில் ஏற்றிச்செல்வதால் வாகன ஓட்டுநர்கள் தடுமாற்றம் அடைகின்றனர்.நெகமம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் அதிகம் விவசாயம் சார்ந்த பகுதிகளே உள்ளது. இப்பகுதியில் தென்னை, வாழை, காய்கள் மற்றும் சோளம் போன்றவைகள் சாகுபடி செய்யப்படுகிறது.இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட விளை பொருட்களை, விவசாயிகள் நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் கிணத்துக்கடவு மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.இதில், நெகமம் - வடசித்தூர் செல்லும் ரோட்டில் டிராக்டரில், காய்ந்த சோளத்தட்டுகளை அதிக அளவு லோடு ஏற்றிச்செல்கின்றனர். இதனால், பாதுகாப்பற்ற நிலை ஏற்படுகிறது.இதனால் மற்ற வாகன ஓட்டுநர்களுக்கு, ரோட்டில் பயணிக்க சிரமம் ஏற்படுவதுடன், விபத்து அபாயம் அதிக அளவு உள்ளது.மேலும், கோடை காலத்தில் இப்படி அதிக லோடு ஏற்றி செல்வதால், ரோட்டின் ஓரத்தில் உள்ள மின் கம்பத்தில் உரசி தீப்பிடிக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே, போலீசார் இதை கவனித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், லோடு ஏற்றிச்செல்லும் போது, வாகன ஓட்டுநர்கள் தேவையான பாதுகாப்பு அம்சங்களை மேற்கொள்ள வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை