உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பல்லடம் - பொள்ளாச்சி ரோடு பணி கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

பல்லடம் - பொள்ளாச்சி ரோடு பணி கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

பொள்ளாச்சி;பல்லடம் - பொள்ளாச்சி நான்கு வழிச்சாலை பணிகளை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தார்.பொள்ளாச்சி நெடுஞ்சாலை கோட்டம், கிணத்துக்கடவு நெடுஞ்சாலை உட்கோட்டம், சுல்தான்பேட்டை பிரிவுக்கு உட்பட்ட பல்லடம் - பொள்ளாச்சி ரோட்டில், காமநாயக்கன்பாளையம் முதல் சுல்தான்பேட்டை வரை மற்றும் அரசூர் பிரிவு முதல் வடசித்துார் பிரிவு வரை இருவழிப்பாதையில் இருந்து நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது.அதில், காமநாயக்கன்பாளையம் முதல் சுல்தான்பேட்டை வரையிலான பகுதியில் முதற்கட்ட தார் ரோடு போடுதல் பணி மற்றும் மையத்தடுப்பு அமைத்தல் பணி நிறைவடைந்துள்ளது.அரசூர் பிரிவு முதல், வடசித்துார் பிரிவு வரையிலான சாலையில் வலதுபுறம் உள்ள பகுதி ஜல்லி கலவை பரப்புதல் பணி நிறைவடைந்துள்ளது. மையத்தடுப்பு அமைத்தல் பணி துவங்கப்பட உள்ளது.இப்பணியை கோவை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ், ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். வேலைகளை விரைவாகவும், தரமாகவும் மேற்கொள்ள அறிவுறுத்தினார். ஆய்வின் போது, பொள்ளாச்சி கோட்ட பொறியாளர் சரவணசெல்வம் மற்றும் கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை அதிகாரிகள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை