உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பங்குனி கிருத்திகை; பக்தர்கள் வழிபாடு

பங்குனி கிருத்திகை; பக்தர்கள் வழிபாடு

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கோவில்களில், கிருத்திகை நாளான நேற்று சிறப்பு வழிபாடுகள் நடந்தது.கிருத்திகை நாளான நேற்று, கிணத்துக்கடவில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. சிவலோக நாயகி உடனமர் சிவலோக நாதர் கோவில் முருகப்பெருமானுக்கு, சிறப்பு அபிேஷக, அலங்கார வழிபாடு நடந்தது.கனககிரி வேலாயுத சுவாமி கோவில், சுவாமிக்கு கிருத்திகை வழிபாடும் நடந்தது. வள்ளி, தெய்வானை சமேத வேலாயுத சுவாமி அருள்பாலித்தார். எஸ்.எம்.பி., நகரில் உள்ள சோற்றுத்துறை நாதர் கோவிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது.பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவில், உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் கிருத்திகை வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை