உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பயனீர் மில் ரோட்டில் பதற வைக்கும் நாய்கள்! பத்துக்கும் மேற்பட்டவை கடிக்க வருவதால் பீதி

பயனீர் மில் ரோட்டில் பதற வைக்கும் நாய்கள்! பத்துக்கும் மேற்பட்டவை கடிக்க வருவதால் பீதி

தெருவிளக்கு பழுது

பாப்பநாயக்கன்புதுார், முல்லை நகர், நான்காவது வீதியில், 'எஸ்.பி., - 24, பி -6' என்ற எண் கொண்ட கம்பத்தில், கடந்த சில நாட்களாக தெருவிளக்கு எரியவில்லை. பணி முடிந்து இரவில் வீடு திரும்பும் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். தெருவிளக்கு இல்லாததால், இரவில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.- வெங்கடேஷ், முல்லை நகர்.

மூடிகளால் விபத்து அபாயம்

கே.கே.புதுார், 44வது வார்டு, ராமலிங்க நகர், நான்காவது வீதியில், சாலை மோசமாக சேதமடைந்துள்ளது. சாலை முழுவதும் பெரிய பள்ளங்கள் உள்ளன. பாதாள சாக்கடை மூடிகள் சாலையிலிருந்து ஒரு அடி உயரத்திற்கு மேல் உள்ளது. மாநகராட்சி முதல் முதல்வர் தனிப்பிரிவு வரை, கடந்த ஏழு மாதங்களாக, பலமுறை புகார் செய்தும் நடவடிக்கையில்லை.- நடராஜன், கே.கே.புதுார்.

நடக்க வழியில்லை

தடாகம் ரோடு, டி.வி.எஸ்., நகர், பேருந்து நிறுத்தம் அருகே, பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையில், 30க்கும் மேற்பட்ட சாலை தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று மாதங்களாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், தடுப்புகளை அகற்ற நடவடிக்கையில்லை.- கார்த்திக், டி.வி.எஸ்., நகர்.

பழுதான சி.சி.டி.வி.,

ரேஸ்கோர்ஸ், ஜெயம் ஹால் அருகே, வருமான வரி அலுவலகம் முன் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகியுள்ளன. நகரின் முக்கியப்பகுதி என்பதால், குற்றச்சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்களை விரைந்து சரிசெய்ய வேண்டும்.- யுவராஜ், திருமகள்நகர்.

கடும் துர்நாற்றம்

மரக்கடை, 82வது வார்டு, மில்ரோட்டில் சாலையோரம் பெருமளவு குப்பை குவிந்துள்ளது. பல நாட்களாக தேங்கியுள்ள கழிவால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பையை அகற்றுவதுடன், மீண்டும் இப்பகுதியில் குப்பை கொட்டாமல் இருக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சரத்துகுமார், மரக்கடை.

மிரட்டும் நாய்கள்

பீளமேடு, 26வது வார்டு, ஏ.டி., காலனியில், பயனீர் மில் ரோட்டில் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றுகின்றன. சாலையில் நடந்து செல்பவர்கள், பைக்கில் செல்பவர்களையும் மிரட்டி அச்சுறுத்துகின்றன. குழந்தைகள், முதியவர்கள் சாலையில் நடந்து செல்லவே அஞ்சுகின்றனர்.- கருப்புசாமி, பீளமேடு.

தெருவிளக்கு பழுது

உப்பிலிபாளையம், 54வது வார்டு, இந்திரா கார்டன் பகுதியில், கம்பம் எண் 33ல், கடந்த இரண்டு வாரங்களாக தெருவிளக்கு எரியவில்லை. போக்குவரத்துக்கு இடையூறாக, சாலை நடுவே உள்ள மின்கம்பத்தையும் மாற்றி அமைக்க வேண்டும்.- வசந்தி, உப்பிலிபாளையம்.

சேறும், சகதியுமான ரோடு

சிங்காநல்லுார், அக்ரஹாரம் பகுதியில், பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக சாலையில் குழிகள் தோண்டப்பட்டன. பணிகள் முடிந்த பின்னர், வெறுமென சாலை மூடப்பட்டது. தார் ஊற்றாததால், மண் சாலை மழையில் சேறும், சகதியுமாக உள்ளது. சாலையில் நடக்கவே சிரமமாக உள்ளது.- ராதிகா, சிங்காநல்லுார்.

மரக்கிளைகளால் இடையூறு

திவான் பகதுார் ரோடு, கென்னடி பேருந்து நிறுத்தம் அருகே, பெரிய மரத்தின் காய்ந்த மரக்கிளைகள் ஒடிந்து, மிகவும் தாழ்வாக உள்ளது. கனரக வாகனங்கள் செல்லும்போது இடையூறாக உள்ளது. மழை, பெரும் காற்றில் மரக்கிளைகள் சாலையில் விழ வாய்ப்புள்ளது.- ஆறுச்சாமி, ரத்தினசபாபதிபுரம்.

மைதானத்தில் குப்பை

வ.உ.சி., மைதானத்தில், பொருட்காட்சி முடிந்த பிறகு, மைதானத்தின் பல பகுதியில் குப்பை தேங்கியுள்ளது. மைதானத்தின் ஓரத்தில், புதர்மண்டி கிடக்கிறது. குப்பையை முழுவதுமாக அகற்றுவதுடன், புதரையும் அகற்றி சுத்தம் செய்ய வேண்டும்.- ராஜ்மோகன், பட்டணம்.

உடைந்த சிலாப்புகள்

செல்வபுரம், முத்துசாமி காலனியில், பேரூர் மெயின் ரோட்டில், நடைபாதையில் பாதாள சாக்கடை சிலாப்மூடிகள் உடைந்த நிலையில் உள்ளது. குழந்தைகள் உள்ளிட்ட பாதசாரிகள் குழியில் விழுவதற்கு வாய்ப்புள்ளது. விபத்துகள் நடக்கும் முன், புதிய சிலாப்புகள் அமைக்க வேண்டும்.- சுப்ரமணியன், பேரூர் செட்டிபாளையம்.

கழிவுநீர் தேக்கம்

கோவை மாநகராட்சி, 83வது வார்டு, தண்டுமாரியம்மன் கோவில் பகுதியில், மாநகராட்சி திருமண மண்டபம் பின்புறம் உள்ள சாக்கடை கால்வாய், சரிவர சுத்தம் செய்யவில்லை. கழிவுநீர் தேக்கத்தால் கொசுத்தொல்லைஅதிகமாக உள்ளது.- நாகராஜன், 83வது வார்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

SOUNDAR D
ஜூலை 23, 2024 12:32

Even after submitting petitions to CM Cell ,Ward councillor and to the Corporation Commissioner, the totally damaged Drainage of Trichy Road in New ward 58 of Singanllur has not been REPAIRED and drainage water is entering into houses.


மேலும் செய்திகள்



புதிய வீடியோ