உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குறைந்த கட்டணத்தில் வெளிநாடுகளுக்கு பார்சல்

குறைந்த கட்டணத்தில் வெளிநாடுகளுக்கு பார்சல்

பொள்ளாச்சி : பொதுமக்கள், தங்கள் அருகே உள்ள தபால் அலுவலகங்கள் வாயிலாக, குறைந்த கட்டணத்தில் வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்பலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி தபால் கோட்ட கண்காணிப்பாளர் ஜெயசீலன் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தபால் அலுவலகங்கள் வாயிலாக, வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்பும் சேவை உள்ளது. அதன்படி, 20 கிராம் முதல் அதிகபட்சம், 35 கிலோ கிராம் வரை, மிகக் குறைந்த கட்டணத்தில் பார்சல்களை அனுப்பலாம்.குறிப்பாக, வாடிக்கையாளர்கள் தபால் நிலையங்கள் வாயிலாக, 219 நாடுகளுக்கு பார்சல்களை அனுப்ப முடியும். இந்த வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.தகவல் மற்றும் உதவிக்கு, மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை பிரதிநிதி கார்த்திக்கை, 9080917319 என்ற மொபைல் போனில் தொடர்பு கொள்ளலாம்.இல்லையெனில், அவரவர் அருகே உள்ள தபால் அலுவலகங்களுக்குச் சென்று தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி