போக்குவரத்து இடையூறு
உடுமலை அருகே குறிச்சிக்கோட்டையில், நால் ரோடு சந்திப்பில் மின்கம்பம் இடையூறாக உள்ளது. அருகே கடையும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால், பஸ்கள் திரும்ப முடியாமல் சிரமப்படுகின்றன. இந்த ஆக்கிரமிப்பை ஊராட்சியினர் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சுரேஷ், உடுமலை. பள்ளத்தை சீரமையுங்க
உடுமலை, பழநிரோடு ஐஸ்வர்யா நகர் செல்லும் பகுதியில், மெகா அளவில் ரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் ரோட்டை கடக்கும் போது அடிக்கடி குழியில் சிக்குகின்றன. பழநி நோக்கி செல்லும் வாகன ஓட்டுநர்கள், வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து அபாயத்துக்கு தள்ளப்படுகின்றனர்.- விஷ்ணுப்ரியா, உடுமலை. போக்குவரத்து நெரிசல்
உடுமலை, பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா அருகே பஸ்கள் நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கி விடப்படுகின்றனர். இதனால் பின் வரும் அனைத்து வாகனங்களும் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை நேரங்களில் இதுபோன்ற நிகழ்வு அடிக்கடி நடப்பதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.- வாசுதேவன், உடுமலை. மண் குவியல்
உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே சென்டர் மீடியனில் மண் தோண்டி குவிக்கப்பட்டுள்ளது. இந்த மண் காற்றில் பறந்து வாகன ஓட்டுநர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, நெடுஞ்சாலைத்துறையினர் இந்த மண்ணை நிரவி சமப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.- செல்வம், உடுமலை. பொதுமக்கள் அவதி
உடுமலை, பொள்ளாச்சி ரோடு பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் முதல் பழைய பஸ் ஸ்டாண்ட் வரை மாலை நேரங்களில் கார்கள் அதிகமாக ரோட்டை ஆக்கிரமித்தும் விதிமுறை மீறியும் நிறுத்தப்படுகின்றன. அவ்வழியாக பாதசாரிகள் நடப்பதற்கும் வழியில்லாமல், ரோட்டின் பாதி வரை வாகனங்கள் இருப்பதால், மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.- சுப்ரமணி, உடுமலை. நாய்த்தொல்லை அதிகரிப்பு
உடுமலை, பசுபதி வீதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் வீடுகளின் முன் கூடி அதிகமாக சண்டையிட்டு கொள்வதும், பொதுமக்களை துரத்தி அச்சுறுத்தும் வகையிலும் உள்ளன. இதனால் குழந்தைகளை வெளியில் அனுப்பவும் பெற்றோர் அச்சப்படுகின்றனர்.- வசந்தகுமார், உடுமலை. போஸ்டர்களை அகற்றணும்!
கிணத்துக்கடவில் பொது இடத்தில் கட்சி மற்றும் அமைப்பு சார்ந்த போஸ்டர்கள் அதிகமாக ஒட்டப்பட்டுள்ளது. இதனால், பார்ப்பதற்கு அலங்கோலமாக உள்ளது. எனவே, பொது இடத்தில் உள்ள போஸ்டர்களை அகற்றம் செய்ய பேரூராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.- -கோகுல், கிணத்துக்கடவு. வீணாகும் குடிநீர்
வால்பாறை மெயின் ரோடு, வஞ்சியாபுரம் பிரிவு, நாட்டுக்கல்பாளையம் ரோட்டில், குடிநீர் குழாய் உடைந்து மாதக்கணக்கில் தண்ணீர் வீணாக ரோட்டில் வழிந்தோடுகிறது. இதனால், அவ்வழியில் செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். இதை ஊராட்சி நிர்வாகம் கவனித்து சரி செய்ய வேண்டும்.- ஐயப்பன், பொள்ளாச்சி. குப்பையால் பாதிப்பு
கிணத்துக்கடவு, மாமாங்கம் நீரோடையில் தண்ணீரில் அதிக அளவு பிளாஸ்டிக் குப்பை மிதந்த படி உள்ளது. இதனால், தண்ணீர் அசுத்தமாகும் நிலையில் உள்ளது. குப்பையால் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் சார்பில், தண்ணீரில் உள்ள குப்பையை அகற்ற வேண்டும்.-- -செந்தில், கிணத்துக்கடவு. ரோட்டை சீரமைக்கணும்!
பொள்ளாச்சி, நல்லுாரில் இருந்து, ஜமீன்ஊத்துக்குளி செல்லும் கிருஷ்ணா குளம் ரோடு உருக்குலைந்துள்ளது. இந்த ரோட்டில் பயணிக்கும் ஓட்டுநர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. ரோட்டை முழுமையாக சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- ரவிக்குமார், பொள்ளாச்சி. குப்பையை அகற்றுங்க!
பொள்ளாச்சி, நியூ ஸ்கீம் ரோடு ரங்கசாமி வீதியில் குப்பை நீண்ட நாட்களாக தேக்கி வைக்கப்பட்டுள்ளது. கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அவ்வழியில் செல்லும் மக்களுக்கும், பொது சுகாதாரமும் பாதிக்கப்படுகிறது. எனவே, மக்களின் நலன் கருதி, நகராட்சி அதிகாரிகள் இங்கு கொட்டப்பட்ட குப்பை அகற்ற வேண்டும்.-- -சிகாமணி, பொள்ளாச்சி. செடிகளை அகற்றுங்க!
கிணத்துக்கடவு, அண்ணாநகர் செல்லும் வழியில் சர்வீஸ் ரோட்டின் ஓரத்தில் உள்ள கழிவு நீர் கால்வாயில் அதிக அளவு செடிகள் வளர்ந்து காணப்படுகின்றன. இதனால், சர்வீஸ் ரோட்டில் மக்கள் நடக்க சிரமமாக உள்ளது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் இந்த செடிகளை அகற்றம் செய்ய வேண்டும்.-- -மோகன், கிணத்துக்கடவு.