மேலும் செய்திகள்
ரேக்ளா பந்தயம் 300 வண்டிகள் களம்
11-Feb-2025
பொள்ளாச்சி; முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாளையொட்டி, அ.தி.மு.க., கோவை தெற்கு மாவட்டம் சார்பில் குதிரை வண்டிபந்தயம், பொன்னாபுரம் மேடு பகுதியில் நடத்தப்பட்டது.இளைஞரணி நிர்வாகி அனுமோகன் ஏற்பாட்டில் நடந்த பந்தயத்தை, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் துவக்கி வைத்தார். 400 மீ., துாரம் ஓட்டம், ரைடிங், துருசு போன்ற பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது.பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு, அவரவர் குதிரைகளை சிட்டாக பறக்கச் செய்தனர். அவ்வகையில் வெற்றி பெற்ற குதிரை மற்றும் வீரர்களுக்கு ரொக்க பரிசு, கோப்பை வழங்கப்பட்டது.நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., முத்துக்கருப்பண்ணசாமி, பொள்ளாச்சி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சக்திவேல், கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய கழக செயலாளர் திருஞானசம்பந்தம் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
11-Feb-2025