உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கணுவாய் தடுப்பணை புனரமைப்பு பணி ஜோர்

கணுவாய் தடுப்பணை புனரமைப்பு பணி ஜோர்

பெ.நா.பாளையம்:தடாகம் ரோடு கணுவாய் தடுப்பணை புனரமைப்பு பணி துவக்க விழா நடந்தது.கணுவாய் தடுப்பணை, கடந்த ஆண்டு சுமார், 27 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைந்து, சின்னவேடம்பட்டி ஏரி வாய்க்காலுக்கு பெருமளவு தண்ணீர் கிடைத்தது. தற்போது, கணுவாய் தடுப்பணை முழுவதும் சிமை கருவேல மரங்கள் மற்றும் குப்பை கழிவுகள் நிறைந்து, பராமரிப்பின்றி கிடைக்கிறது. அதை தூய்மைப்படுத்த, கவுசிகா நீர் கரங்கள் அமைப்பு முயற்சி எடுத்து பணிகள் துவக்கப்பட்டுள்ளன.துவக்க விழா நிகழ்ச்சியில், கோவை கலெக்டர் கிராந்தி குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், கோவை நீர்வளத்துறை பாசன உபகோட்ட உதவி பொறியாளர் அம்சராஜ், பன்னிமடை ஊராட்சி தலைவர் ரத்தினம் மருதாசலம், அத்திக்கடவு கவுசிகா நதி மேம்பாட்டு சங்க தலைவர் செல்வராஜ், கவுசிகா நீர் கரங்கள் செயலாளர் சிவராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை