உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறப்பு வழித்தடத்தில் பஸ்கள் மாற்றி இயக்கம் பயணியர் கடும் அவதிக்குள்ளாயினர்

சிறப்பு வழித்தடத்தில் பஸ்கள் மாற்றி இயக்கம் பயணியர் கடும் அவதிக்குள்ளாயினர்

பொள்ளாச்சி;விநாயர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பொள்ளாச்சி - கோவை இடையே இயக்கப்படும், 12 அரசு பஸ்கள், சிறப்பு வழித்தடத்தில் மாற்றம் செய்து இயக்க அனுமதிக்கப்பட்டதால், பயணியர் பாதிக்கப்பட்டனர்.பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு, கல்லுாரி மற்றும் அலுவலகங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்று திரும்புகின்றனர். பயணியர் நலன் கருதி, பொள்ளாச்சி - கோவை இடையே இரண்டு நிமிட இடைவெளியில், 35 அரசு மற்றும் 15 தனியார் என, 50க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.குறிப்பாக, இந்த பஸ்கள், தினமும், 540 முறைகள் இயக்கப்படுகின்றன. அவ்வகையில், ஆச்சிப்பட்டி, கோவில்பாளையம், தாமரைக்குளம், கல்லாங்காட்டுபுதுார், கிணத்துக்கடவு, மரத்தோப்பு, ஒத்தக்கால்மண்டபம், ஈச்சனாரி, சுந்தராபுரம், குறிச்சி ஆகிய நிறுத்தங்களில் பயணியரை, ஏற்றி இறக்கி உக்கடம் சென்றடைய வேண்டும் என்பதே பஸ் டிரைவர்களுக்கான உத்தரவு.இதேபோல, 'எக்ஸ்பிரஸ்' பஸ்கள், கோவில்பாளையம், கிணத்துக்கடவு, ஒத்தக்கால்மண்டபம், ஈச்சனாரி, குறிச்சி ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்ல வேண்டும். ஆனால், விநாயர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, நேற்று ஒரே நாளில், 12 அரசு பஸ்கள், சிறப்பு வழித்தடத்தில் மாற்றம் செய்து அனுப்பப்பட்டன. இதனால், பயணியர் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.பயணியர் கூறியதாவது:பொள்ளாச்சி - கோவை இடையே பெரும்பாலான தனியார் பஸ்கள், முக்கிய ஸ்டாப்களில் நிறுத்தப்படுவது கிடையாது. நேற்று அரசு பஸ்களின் இயக்கம் குறைக்கப்பட்டதால், பஸ் ஸ்டாண்டிலேயே தனியார் பஸ்களில் பயணியர் கூட்டம் அலைமோதியது.இதனால், அந்த பஸ்கள், முக்கிய ஸ்டாப்புகளை தவிர்த்து, உக்கடம் சென்றடைந்தது. அதேபோல, அங்கும் பயணியர் கூட்டம் காணப்பட்டால், பொள்ளாச்சி செல்லும் பயணியரை மட்டும் அனுமதித்து, முக்கிய ஸ்டாப்கள் தவிர்க்கப்பட்டது.இதனால், காலை நேரத்தில், கிராமப்புறங்களில் இருந்து பணி நிமித்தமாக கோவை செல்ல காத்திருந்த மக்கள் பலரும் பாதிப்படைந்தனர். வழக்கமாக, கோவை-பொள்ளாச்சி இடையே இயக்கப்படும் பஸ்களில் எப்போதும் பயணியர் கூட்டம் நிறைந்தே காணப்படும். இந்நிலையில், அரசு பஸ்களை சிறப்பு வழித்தடத்தில் மாற்றி இயக்க வேண்டிய அவசியமில்லை.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை