உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிருத்திகை விழா கோவிலில் பட்டிமன்றம்

கிருத்திகை விழா கோவிலில் பட்டிமன்றம்

உடுமலை;உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், கார்த்திகை விழா மன்றம் சார்பில், சித்திரை மாத கிருத்திகை விழாவையொட்டி, பட்டிமன்றம் நடந்தது.உடுமலை கார்த்திகை விழா மன்றம் சார்பில், பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சித்திரை மாத கிருத்திகை விழாவையொட்டி, பிரசன்ன விநாயகர் கோவிலில், 798வது நிகழ்ச்சியாக பட்டிமன்றம் நடந்தது.மன்றச்செயலாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். அருண்சங்கர் தலைமை வகித்தார். பட்டிமன்றத்துக்கு, மாரிமுத்து நடுவராகவும், எஸ்.என்.எம்.வி., கல்லுாரி பேராசிரியர் உமாமகேஸ்வரி, உதவி பேராசிரியர் கவிதா பேசினர்.மன்றத்தின் துணைச்செயலாளர் கிருஷ்ணகுமார் நன்றி தெரிவித்தார். ஏற்பாடுகளை மன்றத்தின் தலைவர் ரவீந்திரன், துணைத்தலைவர் சுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ