உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கொசுப்புழு இருந்தால் அபராதம்; நகராட்சி செயல்படுத்துமா?

கொசுப்புழு இருந்தால் அபராதம்; நகராட்சி செயல்படுத்துமா?

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகரில், கொசுப்புழு உற்பத்தியாவது கண்டறியப்பட்டதால், சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கொசுப்புழு உற்பத்தியாவதை தடுக்கும் வகையில், 'அபேட்' மருந்து தெளித்தும், தண்ணீர் தேக்கமடைவதை கண்டறிந்து அப்புறத்தப்பட்டும் வருகின்றன.குறிப்பாக, பழைய மற்றும் உடைந்த பொருட்கள், டயர்கள், வீட்டின் முன் மற்றும் மாடிகளில் வைக்கப்பட்டுள்ள சிறு பூந்தொட்டிகளில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள, பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். இருப்பினும், அவ்வப்போது பெய்யும் மழையால், அரசு மற்றும் தனியார் கட்டங்களில் தண்ணீர் தேக்கமடைந்து கொசு உற்பத்தி அதிகரிக்கிறது. இரவு மட்டுமின்றி பகல் நேரத்தில், கொசுக்களின் தாக்குதல் அதிகரிக்கிறது. எனவே, குடியிருப்புகள், வணிகக் கடைகள், அரசுக்கு சொந்தமான கட்டடங்களில் கொசு உற்பத்தியாவது கண்டறிப்பட்டால், அபராதம் விதிக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.தன்னார்வலர்கள் கூறியதாவது:ஒவ்வொருவரும் தங்களது பகுதிகளை, சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மழையால், ஆங்காங்கே தண்ணீர் தேக்கமடைவதால் கொசு உற்பத்தியாகிறது. அதற்கு ஏற்ப தேக்கமடையும் தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டும்.இதேபோல, மழையால், குடியிருப்புகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் செடிகள் வளர்ந்து, புதர் மண்டி காணப்படுகிறது. அரசு மற்றும் தனியார் கட்டடங்களின் மேற்கூரையில் தண்ணீர் தேக்கமடைகிறது. அப்புறப்படுத்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.எனவே, சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கும் அபராதம் விதிக்க வேண்டும். அப்போது தான், கொசுப்புழு உற்பத்தியை முழுமையாக தடுக்க முடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை