உன்னத இந்தியா திட்டத்தில் பள்ளியில் மரக்கன்றுகள் நடவு
பொள்ளாச்சி அருகே, சுப்பேகவுண்டன்புதுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 'உன்னத இந்தியா' திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.நாடு முழுவதும் கிராமப்புறங்களை மேம்படுத்த, 'உன்னத இந்தியா' திட்டத்தின் கீழ், கல்வி நிறுவனங்கள் வாயிலாக கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகின்றன.அவ்வகையில், ஒவ்வொரு கல்வி நிறுவனங்களும், 30 ஆயிரத்துக்குக் குறைவான மக்கள்தொகை கொண்ட கிராமங்களை தேர்வு செய்து, அவற்றில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. பொள்ளாச்சி சக்தி தகவல் தொடர்பியல் மற்றும் மேலாண்மைக் கல்லுாரி சார்பில், சுப்பேகவுண்டன்புதுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில், மரக்கன்று நடவு செய்யப்பட்டது.பழங்கள், மூலிகை மற்றும் நிழல் தரும் மரக்கன்றுகளை, கல்லுாரி மாணவர்கள் நடவு செய்தனர்.இதில், யு.பி.ஏ., ஒருங்கிணைப்பாளர் கவிதா, இணை ஒருங்கிணைப்பாளர் பாலாஜிவிக்னேஷ், ஊராட்சித் தலைவர் மோகன்ராஜ், பள்ளித் தலைமையாசிரியர் பொற்கொடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உடுமலை
தும்பலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடந்தது. தும்பலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மரக்கன்று நடுபவர்களின் தாயார் இந்நிகழ்ச்சி நடந்தது.விழாவில் உடுமலை வட்டாரக்கல்வி அலுவலர் சரவணக்குமார், முதல் மரக்கன்றை நட்டார். தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் மரக்கன்றுகளை நட்டனர். தொடர்ந்து சுதந்திர தினவிழாவையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்ளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.பள்ளித்தலைமையாசிரியர் பாப்பாத்தி நன்றி தெரிவித்தார். விழாவில் தன்னார்வல அமைப்புகள், பெற்றோர் பங்கேற்றனர்.