உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சூலுார் வட்டாரத்தில் உழவு பணிகள் துவக்கம்

சூலுார் வட்டாரத்தில் உழவு பணிகள் துவக்கம்

சூலுார்;சூலுார் வட்டாரத்தில் பெய்த மழை காரணமாக உழவு பணியை விவசாயிகள் துவக்கியுள்ளனர். சூலுார் வட்டாரத்தில், நீலம்பூர், மயிலம்பட்டி, சின்னியம்பாளையம், குளத்துார், அத்தப்பகவுண்டன் புதூர், அரசூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த ஒரு வாரமாக மழை பெய்தது. இதனால், நீர் நிலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. விளை நிலங்கள் ஈரப்பதத்தை அடைந்துள்ளன.இதையடுத்து, கோடை உழவு செய்யாத விவசாயிகள் உழவு பணியை மேற்கொண்டுள்ளனர். கோடை உழவு செய்த விவசாயிகள் விதைப்புக்கு தயாராகி வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ''இம்முறை அக்னி நட்சத்திர காலத்தில் ஓரளவு நல்ல மழை பெய்தது.அதைத்தொடர்ந்தும் பல இடங்களில் மழை பெய்தது. குளம், குட்டைகளுக்கு தண்ணீர் வந்துள்ளது. இனி பருவ மழையும் பெய்யத் துவங்கும் என, எதிர்பார்க்கிறோம். அதனால், இம்முறை பயிர்கள் விளைச்சல் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி