உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 ரிசல்ட்

இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 ரிசல்ட்

கோவை;பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 6) காலை 9:30 மணிக்கு வெளியிடப்படவுள்ளன.தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் 1 ம் தேதி துவங்கி, 22 ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை கோவை வருவாய் மாவட்டத்தில் 363 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ளனர். விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவடைந்த நிலையில், ஆன்லைனில் மதிப்பெண்கள் பதிவேற்றும் பணி உள்ளிட்ட இதர பணிகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து, திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 6ம் தேதி காலை 9:30 மணிக்கு வெளியிடப்படவுள்ளன. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.inமற்றும் www.dge.tn.gov.inஆகிய இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், கைப்பேசி எண்ணிற்கும் குறுச்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

வெற்றி, தோல்வி சகஜம்

கோவை மண்டல நடமாடும் உளவியல் வாகன திட்ட முன்னாள் அதிகாரி அருள்வடிவு கூறியதாவது: தேர்வில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். அதனை மாணவர்களும், பெற்றோரும் நேர்மறையாக எதிர்கொள்ள வேண்டும். தேர்வில் தோல்வியடைவதை வாழ்க்கையில் தோல்வி அடைந்துவிட்டதாக எண்ண வேண்டாம். இது தொடக்கம்தான் என்பதை மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும். தோல்வியடையும் மாணவர்களுக்கு குடும்பத்தினர் பக்கபலமாக இருக்க வேண்டியது அவசியம். ''தோல்வி அடைந்ததைப் பற்றி மட்டுமே பேசாமல் அடுத்தகட்டமாக துணைத் தேர்வுக்கு தயாராக வேண்டும். தேர்வு முடிவு நாளைக் கடந்துவிட்டால் எதிர்மறை எண்ணங்கள் வராது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ