உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நகை ஒப்படைத்த ஊழியருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு

நகை ஒப்படைத்த ஊழியருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு

கோவை:கோவை ராம் நகரில் விஜய் பார்க் இன் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு, கடந்த சில நாட்களுக்கு முன், பெங்களூருவை சேர்ந்த தம்பதி, அறை எடுத்து தங்கினர். அவர்கள் தங்களது, 100 கிராம் தங்க நகையை, அறையில் தவறவிட்டு சொந்த ஊர் திரும்பினர்.இந்நிலையில், ஓட்டல் ஊழியர் அசாமை சேர்ந்த சஞ்ஜூ டோலே, 20, அறையில் இருந்த துணிகளை சுத்தம் செய்தார். அப்போது துணிக்குள் இருந்த நகையை பார்த்துள்ளார். உடனே அவர் அதை ஓட்டல் நிர்வாகத்தினரிடம் கொடுத்துள்ளார்.ஓட்டல் நிர்வாகம் விசாரித்து, பெங்களூரு தம்பதியை நேரில் வரவழைத்து, நகையை ஒப்படைத்தனர். இந்த தகவலை அறிந்த போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், ஓட்டல் ஊழியர் சஞ்ஜூ டோலேவை நேரில் வரவழைத்து பாராட்டி கவுரவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை