உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போக்சோ கைதி பலி போலீசார் விசாரணை

போக்சோ கைதி பலி போலீசார் விசாரணை

கோவை,; நீலகிரி மாவட்டம் பந்தலுார் ஒப்பிலி கிராமத்தை சேர்ந்தவர் திராவிடமணி, 59. மூன்று ஆண்டுகளுக்கு முன், போக்சோ வழக்கில், சேரம்பாடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் அவர் தண்டனை பெற்று, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையின் மூன்றாவது பிளாக்கில், 59வது அறையில் இருந்தார்.கடந்த, 22ம் தேதி திராவிடமணிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. போலீசார் அவரை சிறை மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின், கோவை அரசு மருத்துவ மனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். திராவிடமணி ஐந்து நாட்களில் விடுதலையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை