உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொங்காளியம்மன் கோவில் மாசி திருவிழா துவக்கம்

பொங்காளியம்மன் கோவில் மாசி திருவிழா துவக்கம்

போத்தனூர்; கோவை, குறிச்சியிலுள்ள கற்பக வினாயகர், பொங்காளியம்மன் கோவிலில் மாசி திருவிழா முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம், நேற்று காலை கணபதி ஹோமம், கொடியேற்றத்துடன் துவங்கியது.வரும், 18ம் தேதி மாலை 5:00 மணிக்கு மேல் அம்மன் அழைப்பு, திருக்கல்யாணம் நடக்கிறது. 19 காலை, 9:00 மணிக்கு மேல் குறிச்சி பஸ் ஸ்டாப்பிலுள்ள கற்பக விநாயகர் கோவிலிலிருந்து பால், தீர்த்த குடம் புறப்பாடும், மதியம், 12:00 மணிக்கு மேல் மகா அபிஷேக அலங்கார பூஜை மற்றும் தீபாராதனையும் நடக்கிறது. தொடர்ந்து மாவிளக்கு பூஜை நடக்கிறது.20ம் தேதி மாலை 6:00 மணிக்கு மேல் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. 21 மதியம், 12:00 மணிக்கு மேல் மறுபூஜை மற்றும் அன்னதானத்துடன், விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை