உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அங்காளம்மன் கோவிலில் பூக்குண்டம் திருவிழா

அங்காளம்மன் கோவிலில் பூக்குண்டம் திருவிழா

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் குப்பிச்சிபாளையம் ரோட்டில் உள்ள அங்காளம்மன் கோவிலில் பூக்குண்டம் திருவிழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவையொட்டி பிப்., 27ம் தேதி கொடியேற்றுதல், பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, இம்மாதம், 5ம் தேதி வரை தினசரி மாலை, 7:00 மணிக்கு கோவில் சுற்றுபூஜை, தீப வழிபாடு நடந்தது. 6ம் தேதி இரவு, 7:00 மணிக்கு ஆபரணம் எடுத்து வருதல், இரவு, 8:00 மணிக்கு அம்மன் அழைத்தல் நடந்தது. 7ம் தேதி மண்ணுடையாருக்கு மரியாதை செலுத்துதல், முத்துடைத்தல், பேச்சியம்மன் விழா துவக்கம், சிரசு எடுத்து வருதல், மயான பூஜை ஆகியன நடந்தன. நேற்று முன்தினம் அதிகாலை சக்தி கரகம், குண்டத்தில் பூ வளர்த்தல் நடந்தது. நேற்றுக்காலை, 5:00 மணிக்கு அக்கினி கரகம் அழைத்தல், 8:00 மணிக்கு பூ மிதித்தல், காலை, 10:00 மணிக்கு அக்னி அபிஷேகம் தொடர்ந்து அன்னதானம் நடந்தது. இம்மாதம், 16ம் தேதி வசந்த பூஜையுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !