உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் ஓட்டு தேர்தல் ஆணையம் வழங்கியது வசதி

மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் ஓட்டு தேர்தல் ஆணையம் வழங்கியது வசதி

பொள்ளாச்சி:கோவை லோக்சபா தொகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள், வரப்போகும் தேர்தலில் தபால் ஓட்டு பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில் வசிக்கும், 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஓட்டுச்சாவடிக்கு நேரில் சென்று, ஓட்டளிப்பதற்கான சிரமத்தை தவிர்க்க, தபால் ஓட்டு அளிக்க இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியிருக்கிறது.இதற்கு ஒவ்வொருவரிடமும், அவர்களது சுய விருப்பத்தை பெறுவதற்காக, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், படிவம் 12டி மற்றும் வாக்காளர் பட்டியலுடன் வீடு தேடி வருவர்.படிவத்தை படித்துப் பார்த்தோ அல்லது படிக்கக் கேட்டோ ஒப்புதல் தெரிவிக்கலாம் அல்லது, கோவை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும், மாவட்ட தேர்தல் அதிகாரி அல்லது அந்தந்த சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு வரும், 24ம் தேதிக்குள் நேரில் சென்று, படிவம்-12டி பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.இத்தகவலை, கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை