| ADDED : ஜூலை 16, 2024 11:33 PM
பொள்ளாச்சி;தமிழ்நாடு வேளாண் பல்கலையில், பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் இரண்டு நாள் பயிற்சி, நாளை 18ம் தேதி முறை இரு நாட்கள் நடைபெறஉள்ளது.இப்பயிற்சி, சிறுதொழில் முனைவோருக்கு தங்களது வருமானத்தைப் பெருக்க, பெரிதும் உதவியாக இருக்கும். வேளாண் பல்கலையில் ரொட்டி வகைகள், கேக் மற்றும் பிஸ்கட், பப்ஸ் ஆகியவை தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.இத்தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ளவர்கள், 1,770 ரூபாய் செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், பயிற்சி அளிக்கப்படவுள்ளது.இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண் பல்கலை, கோவை என்ற முகவரியிலும், 94885 18268 என்ற போன் எண்ணிலும், தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.