உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிரஜ்ஞா யோகா பயிற்சி குழந்தைகள் உற்சாகம்

பிரஜ்ஞா யோகா பயிற்சி குழந்தைகள் உற்சாகம்

சூலுார்;வாழும் கலை அமைப்பின் 'பிரஜ்ஞா யோகா' பயிற்சி வகுப்பில் குழந்தைகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.வாழும் கலை அமைப்பு சார்பில், குழந்தைகளுக்கான 'பிரஜ்ஞா யோகா' பயிற்சி முகாம் முத்துக்கவுண்டன் புதூர் விவேகானந்தர் அரங்கத்தில் இரு நாட்கள் நடந்தன. 22 பெண் குழந்தைகள், 13 ஆண் குழந்தைகள் பங்கேற்றனர். மூத்த யோகா ஆசிரியர் தாமோதரன் பயிற்சி அளித்தார். ஆறாவது அறிவை மேம்படுத்தவும், நினைவாற்றலை வளர்க்கவும், படைப்பாற்றல் நம்பிக்கையை அதிகரிக்கவும், உணர்வு திறன்கள் மற்றும் உள்ளுணர்வு செயல்முறைகளை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட பயிற்சி முகாமில், குழந்தைகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். இதேபோல் உத்கர்ஷ யோகா, மேதா யோகா மற்றும் ஆனந்த அனுபவ பயிற்சியிலும் ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி