உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாட்டம் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாட்டம் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள பள்ளிகளில், மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின், 122வது பிறந்த நாள் விழா, கல்வி வளர்ச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது.* கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகளை பள்ளி தாளாளர் மற்றும் செயலாளர் வழங்கினார். கடந்த ஆண்டு கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.* சின்னேரிபாளையம் சுவஸ்திக் பள்ளியில், தாளாளர் தீபாகாந்தி தலைமை வகித்தார். ஆங்கில ஆசிரியர் மோகன்ராஜ், காமராஜர் கல்வித்துறையில் செய்த மாற்றங்கள் பற்றி விளக்கினார். பாடல், கவிதை, ஓவியம்,கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடைபெற்றன. மாணவர்கள், காமராஜர் வேடம் அணிந்தனர்.* கோடங்கிப்பட்டி தொடக்கப்பள்ளியில், காமராஜரின் படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியை சத்தியா, விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.* ரமணமுதலிபுதுார் தொடக்கப்பள்ளியில், ஊராட்சி துணை தலைவர் திலகவதி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் அழகேஸ்வரி வரவேற்றார்.காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட அணைகளின் புகைப்படங்கள், அதன் விபரங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். உதவியாசிரியை கலைச்செல்வி நன்றி கூறினார்.* தொப்பம்பட்டி நடுநிலைப்பள்ளியில், தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார்.காமராஜரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.* மாக்கினாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், பி.ஏ., கல்வி நிறுவனங்களின் தாளாளர் அப்புகுட்டி பங்கேற்றார். கடந்த ஆண்டில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள் மற்றும் தேர்ச்சிக்கு உழைத்த ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.* ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், தலைமையாசிரியர் கிட்டுச்சாமி வரவேற்றார். பள்ளி செயலர் ரங்கசாமி தலைமை வகித்தார். காமராஜர் சிறப்புகள் குறித்து விளக்கப்பட்டது.* ஆர்.பொன்னாபுரம் நடுநிலைப்பள்ளியில், தலைமையாசிரியர் பாரிஸ்பேகம் தலைமை வகித்தார். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் சண்முகசுந்தரம் வரவேற்றார். போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.

வால்பாறை

* வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், காமராஜர் படத்துக்கு, தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் மாலை அணிவித்தார். காமராஜரின் சாதனைகள் குறித்தும், அவரது வாழ்க்கை வரலாறு குறித்தும் தெரிவிக்கப்பட்டது.* முடீஸ் மத்திய நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில், தலைமை ஆசிரியர் கணேஷ் தலைமை வகித்தார். பள்ளிக்கல்விக்குழு செயலாளர் ஜான்சன் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.* நல்லகாத்து துவக்கப்பள்ளியில், காமராஜர் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் ரஞ்சித்குமார் பரிசு வழங்கினார்.* வால்பாறை காங், கட்சி சார்பில் நடந்த விழாவில், நகர காங்,., தலைவர் அமீர் தலைமை வகித்தார். காமராஜர் சிலைக்கு மாவட்ட துணைத்தலைவர் கருப்பையா மாலை அணிவித்தார். சிறுபான்மைப்பிரிவு செயல்தலைவர் சந்திரசேகர், சட்டசபை தொகுதி தலைவர் ஈஸ்டர்ராஜா பங்கேற்றனர்.

கிணத்துக்கடவு

* கிணத்துக்கடவு, சிக்கலாம்பாளையம் நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில், தலைமை ஆசிரியர் ஜெயந்தி, காமராஜர் வாழ்க்கை வரலாறு பற்றி பேசினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.* மெட்டுவாவி நடுநிலைப்பள்ளியில், கவிதை, கட்டுரை, ஓவியம், மாறுவேடம், பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் மயிலாத்தாள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.* நெ.10.முத்தூர் நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில், தலைமை ஆசியர் நர்மதா தலைமை வகித்தார். போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.* கிணத்துக்கடவு புது பஸ் ஸ்டாண்டில், பெருந்தலைவர் பேரவை சார்பில், காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பேரவையின் தலைவர் கதிர்வேல், பேரூராட்சி தலைவர் கதிர்வேல் பங்கேற்று மரியாதை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை