உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்! கண்காணிப்பு அலுவலர் நியமிக்கலாம்

பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்! கண்காணிப்பு அலுவலர் நியமிக்கலாம்

பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகராட்சி வார்டுகளில் நிலவும் குடிநீர், சாக்கடை உள்ளிட்ட பிரச்னைகளை உடனுக்குடன் களைய, கண்காணிப்பு அலுவலர்களை நியமிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.பொள்ளாச்சி நகராட்சியில், 36 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் அடிக்கடி குடிநீர், குழாய் உடைப்பு, சுகாதாரம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன. வார்டுகளில் குப்பை முறையாக அப்புறப்படுத்தப்படாதது, தெரு விளக்குகள் எரியாதது போன்ற பிரச்னைகளும் எழுகின்றன.இது குறித்து, பொதுமக்கள், அந்தந்த வார்டு கவுன்சிலர்களிடம் மட்டுமே முறையிடுகின்றனர். இப்பிரச்னைகளை நகராட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்ல கவுன்சிலர்கள் முற்பட்டாலும் நடவடிக்கை எடுப்பதில்லை.அதற்கு, மாறாக, நீண்ட நாட்கள் கழித்த பிறகே, புகார் மீது நடவடிக்கை எடுக்கின்றனர். எனவே, பொதுமக்களின் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய கண்காணிப்பு அலுவலர்களை நியமிக்க வேண்டும்.தன்னார்வலர்கள் கூறியதாவது:நகராட்சியில், கமிஷனர், பொறியாளர், நகர்நல அலுவலர் என, பதவியில் உள்ள அலுவலர்களைக் கொண்டு, கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்க வேண்டும். இவர்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வார்டுகளை பிரித்து கொடுக்க வேண்டும்.சம்பந்தப்பட்ட வார்டுகளில் எழும் புகார்களுக்கு அவர்களே பொறுப்பு வகிக்கவும் வேண்டும். கண்காணிப்பு அதிகாரிகளை உள்ளடக்கிய 'வாட்ஸ்ஆப்' குழு ஏற்படுத்தப்பட்டால், புகார்கள் பகிரப்பட்டு, உடனடியாக நடவடிக்கையும் எடுக்கலாம். நகராட்சி கூட்டத்தில், இதற்கான தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை