உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தென்னை வளர்ச்சி வாரியத்தின் செயலால் அதிருப்தி உற்பத்தியாளர் நிறுவனங்கள் புகார்

தென்னை வளர்ச்சி வாரியத்தின் செயலால் அதிருப்தி உற்பத்தியாளர் நிறுவனங்கள் புகார்

பொள்ளாச்சி: 'தென்னை வளர்ச்சி வாரியம், தனியார் நிறுவனத்துடன் இணைந்து, நிகழ்ச்சிகளை நடத்தி கணக்கு காட்டுவதுடன், தென்னை உற்பத்தியாளர்கள் நிறுவனங்களை புறக்கணித்து வருகிறது. இதற்கு உரிய தீர்வு காண வேண்டும்,' என, தென்னை உற்பத்தியாளர் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.கோவை வேளாண் பல்கலையில், தனியார் நிறுவனத்துடன், வேளாண் பல்கலை, தென்னை வளர்ச்சி வாரியம் இணைந்து, 'கோகேனெட் பெஸ்டிவல், 2024' என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தியது. இதற்கு முறையான அழைப்பு விடுக்கவில்லை என தென்னை உற்பத்தியாளர்கள் நிறுவனத்தினர் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.l தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர்கள் நிறுவனங்களின் நட்பமைப்பு தலைவர் சக்திவேல்:கோவை வேளாண் பல்கலை கழகத்தில், தனியார் நிறுவனத்துடன் நிகழ்ச்சி நடத்துகின்றனர். இதற்கு எவ்வித அழைப்பும் விடுக்கவில்லை. அனைத்து விதமான திட்டங்களும் அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.விவசாயிகளை புறக்கணித்து நிகழ்ச்சி நடத்தும் தென்னை வளர்ச்சி வாரியம், எதற்காக நிறுவனங்களை துவங்க கூறியது என்பதை விளக்க வேண்டும்.l கற்பக விருட்சம் தென்னை உற்பத்தியாளர் நிறுவன தலைவர் பகவதி:தமிழகத்தில், தென்னை நார் உற்பத்தியாளர் சங்கங்கள் துவங்க கடந்த, 2012ல் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, தமிழகத்தில், 629 சங்கங்களும், கோவை மாவட்டத்தில், 265 சங்கங்களும் துவங்கப்பட்டன. அதன்பின், தென்னை வளர்ச்சி வாரிய அறிவுறுத்தலின்படி, சங்கங்கள் இணைந்து, கூட்டமைப்பு துவங்கப்பட்டது. தமிழகத்தில், 69 கூட்டமைப்புகளும், கோவை மாவட்டத்தில், 34 கூட்டமைப்புகளும் துவங்கப்பட்டன.நிறுவனங்களாக துவங்க அறிவுறுத்தியதால், தமிழகத்தில், 17 நிறுவனங்களும்; அதில், மாவட்டத்தில் மட்டும் ஆறு நிறுவனங்களும் துவங்கப்பட்டன. ஆனால், நிறுவனம் துவங்கிய பின், தென்னை வளர்ச்சி வாரியம் வாயிலாக எவ்வித உதவியும் கிடைப்பதில்லை. தனியார் நிறுவனங்கள் வாயிலாகவே அனைத்து பணிகளும் நடககிறது.தற்போது, தனியார் நிறுவனத்தை வைத்து நிகழ்ச்சி நடத்தியதாக கணக்கு காட்டுவது வேதனை அளிக்கிறது. தென்னை வளர்ச்சி வாரியம், விவசாயிகள் அடங்கிய நிறுவனங்களை மதிக்காமல் இருப்பது வேதனையாக உள்ளது.l தேசிய தென்னை விவசாயிகள் நட்பமைப்பு தேசிய ஒருங்கிணைப்பாளர் செல்லத்துரை:விவசாயிகளுக்கு பயன்கள் எளிதில் சென்றடைய தென்னை வளர்ச்சி வாரியம் உருவாக்கப்பட்டது. ஆனால், தற்போது வாரியம், பன்னாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு விவசாயிகளுக்கு கிடைக்கும் பயன்கள் கிடைக்காமல் செய்யும் மோசமான நிலையில் உள்ளது.விவசாயிகள் உற்பத்தி செய்யும் தேங்காய்கள், அந்த நிறுவனம் வாயிலாகவே விற்பனை செய்யப்படுகிறது. வாரியம் வாயிலாக கிடைக்கும் பயன்கள் நேரடியாக விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை.இடைத்தரகர்களை தவிர்க்க நிறுவனங்கள் துவங்கப்பட்டன. ஆனால், தற்போது தனியார் நிறுவனத்துடன் இணைந்து விழா நடத்துவது; விவசாயிகளை புறக்கணிப்பது போன்ற செயல்கள் வருத்தம் அளிக்கிறது. அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும்.l விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவன தலைவர் பத்மநாபன்:தென்னை வளர்ச்சி வாரியத்துக்கு தலைவர் நியமிக்கப்படாததால், இதுபோன்று குளறுபடிகள் ஏற்படுகிறது. தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களை புறக்கணித்து விழாக்கள் நடத்துவது வேதனை அளிக்கிறது.மத்திய அரசு தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தணும் என நினைத்தாலும், அதிகாரிகளின் அலட்சியத்தால் அதன் நோக்கமே வீணாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை