உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநில அளவிலான கூடைப்பந்து டிராபியை வென்றது பி.எஸ்.ஜி.,

மாநில அளவிலான கூடைப்பந்து டிராபியை வென்றது பி.எஸ்.ஜி.,

கோவை; மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி அணி முதல் பரிசை தட்டியது.பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரியில், 49வது மாநில அளவிலான கல்லுாரிகளுக்கு இடையேயான 'பி.எஸ்.ஜி., டிராபி' கூடைப்பந்து போட்டி, இரு நாட்கள் நடந்தது. ஆண்களுக்கான இப்போட்டியில், மாநிலத்தில் உள்ள 'டாப்' எட்டு அணிகள் பங்கேற்றன.'லீக்' முறையிலான போட்டிகளின் நிறைவில், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி, முதல் பரிசை தட்டியது. இரண்டாம் பரிசை, சென்னை டி.ஜி., வைஷ்ணவ் கல்லுாரி அணியும், மூன்றாம் பரிசை திண்டுக்கல் ஜி.டி.என்., கல்லுாரி அணியும், நான்காம் பரிசை திருச்சி புனித ஜோசப் கல்லுாரி அணியும் வென்றன.வெற்றி பெற்ற அணிகளுக்கு, கோவை மாவட்ட கூடைப்பந்து சங்க துணை தலைவர் அசோக், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி செயலாளர் கண்ணய்யன், முதல்வர்(பொ) செங்குட்டுவன் ஆகியோர் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை