உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வெட்டப்பட்ட பச்சை மரங்கள் பொதுமக்கள் எதிர்ப்பு

வெட்டப்பட்ட பச்சை மரங்கள் பொதுமக்கள் எதிர்ப்பு

அன்னுார், ; செம்பாகவுண்டன்புதுாரில், பொதுமக்கள் எதிர்ப்பால் மரங்கள் வெட்டப்படுவது பாதியில் நிறுத்தப்பட்டது.குப்பேபாளையம் ஊராட்சி, செம்பா கவுண்டன் புதூரில் புதிதாக ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு, சில நாட்களுக்கு முன் திறக்கப்பட்டது. இந்நிலையில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே பல ஆண்டுகளான பசுமையான ஐந்து மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டு, மரங்களையும் வெட்டி அகற்ற முயற்சிக்கப்பட்டது.தகவல் அறிந்து அப்பகுதி மக்கள் அங்கு சென்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மரங்களை அகற்றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.பொதுமக்கள் கூறுகையில், 'பல ஆண்டுகளான பசுமையான மரங்களை வெட்டி அகற்ற முயற்சித்துள்ளனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மரங்களை வெட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை