உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோடநாடு, கெத்தையில் மழை தீவிரம்

கோடநாடு, கெத்தையில் மழை தீவிரம்

ஊட்டி;நீலகிரியில் கோடநாடு, கெத்தை பகுதிகளில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம், முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை பெரும்பாலான பகுதிகளில் கன மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, கோத்தகிரி கோடநாடு, 11 செ.மீ., கெத்தை, 10 செ.மீ., குந்தா, 9 செ.மீ., குன்னுார், 7 செ.மீ., மழை பதிவாகியது. மாவட்டத்தில், கடந்த மூன்று நாட்களில், 10 செ.மீ., மழை பெய்துள்ளது. மழை தொடர்வதால் தேயிலை விவசாயிகள், மலை காய்கறி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேவேளையில், இரவில் கடும் குளிரான காலநிலை தொடர்வதால், சுற்றுலா பயணிகள் அவதிப்படுகின்றனர். மலர் கண்காட்சியை, 26ம் தேதி வரை நீட்டிப்பு செய்தும், காலநிலை மாற்றம் காரணமாக எதிர்பார்த்த பயணிகள் கூட்டம் வரவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை