உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மீண்டும் முளைக்கும் விளம்பர பலகைகள்; இரும்பு சாரம் வெட்டி அகற்ற அறிவுரை

மீண்டும் முளைக்கும் விளம்பர பலகைகள்; இரும்பு சாரம் வெட்டி அகற்ற அறிவுரை

கோவை;கோவையில் விடுபட்ட இடங்களில் இருந்த அனுமதியற்ற விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன. மீண்டும் மீண்டும் விளம்பர பலகைகள் வைக்கப்படுவதால், இரும்பு சாரங்களை வெட்டி அகற்ற, அரசு துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோவை மாநகராட்சி பகுதி மற்றும் நீலாம்பூர், சின்னியம்பாளைம் ஊராட்சிகள், கருமத்தம்பட்டி நகராட்சி பகுதிகளில், ஆங்காங்கே அனுமதியற்ற விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. கலெக்டர் கிராந்திகுமார் மற்றும் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோரது கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.அவற்றை அகற்ற உத்தரவிட்ட இவ்விரு அதிகாரிகளும், அரசு விதிமுறையை மீறி, மீண்டும் மீண்டும் அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைக்கப்படுவதால், இரும்பு சாரங்களையும் வெட்டி அகற்ற அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்த விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன. தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட ஆத்துப்பாலத்தில் விடுபட்டு இருந்தது. அவை நேற்று அகற்றப்பட்டன.இதேபோல், நீலாம்பூர் ஊராட்சியில் இரு இடங்களில் விளம்பர பலகைகள் எடுக்கப்படாமல் இருந்தன. அவை நேற்று அகற்றப்பட்டன. இரும்பு சாரங்கள் விரைவில் அகற்றப்படும். அனுமதியின்றி மீண்டும் விளம்பர பலகைகள் வைத்தால், கட்டட உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என, அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை