| ADDED : ஜூன் 12, 2024 10:16 PM
பொள்ளாச்சி : ஆனைமலை அருகே, தனியார் தோட்டத்தில் பிடிப்பட்ட மலைப்பாம்பு, ஆழியாறு அடர் வனப்பகுதிக்குள் விடப்பட்டது.ஆனைமலை அருகே, அங்கலக்குறிச்சியைச் சேர்ந்தவர் விவசாயி சிவராமன். இவருக்கு சொந்தமான தோட்டத்தில், ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார்.இந்நிலையில், நேற்று வழக்கம்போல, கோழிகளை மேய்ச்சலுக்கு, திறந்து விடுவதற்காக கூண்டு அருகே சென்றுள்ளார். அப்போது, மலைப் பாம்பு ஒன்று, அசையாமல் படுத்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த வனக்குழுவினர், கோழி கூண்டில் இருந்த மலைபாம்பை மீட்டு, ஆழியாறு அடந்த வனப்பகுதிகள் விட்டனர்.வனத்துறையினர் கூறுகையில், ''பிடிப்பட்ட மலைப்பாம்பு, 11 அடி நீளம் கொண்டது. இரை தேடி வந்த மலைப்பாம்பு கோழியை விழுங்கியதால், ஜீரணிக்கும் வரை நகராமல் படுத்திருந்தது,' என்றனர்.