உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நீரோடையில் கழிவு அகற்றினால் நிம்மதி

நீரோடையில் கழிவு அகற்றினால் நிம்மதி

கிணத்துக்கடவு, கிணத்துக்கடவு, தேவணாம்பாளையம் நீரோடையில் குப்பை கொட்டப்பட்டுள்ளதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.கிணத்துக்கடவு, தேவணாம்பாளையம் ரோட்டில் தினமும், நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. இந்த ரோட்டின் ஓரத்தில் நீரோடை உள்ளது. இந்த நீரோடை முழுவதும் தற்போது வறண்டு காணப்படுகிறது.இந்நிலையில், மர்ம நபர்கள் சிலர் இந்த வழியாக பைக்கில் செல்லும் போது, பிளாஸ்டிக் கழிவு மற்றும் குப்பையை வீசி செல்கின்றனர். மேலும், இந்த நீரோடையின் மற்றொரு பகுதியில், காலி மது பாட்டில்கள் கிடக்கிறது. இதனால் அங்கு பொது சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.எனவே, வறட்சியான காலத்தில் இந்த நீரோடையில் உள்ள குப்பையை ஊராட்சி நிர்வாகம் சார்பில் அகற்றம் செய்தால், மழை பெய்யும் காலத்தில், நீரோடையில் மழை நீரை சேமித்து விவசாயத்திற்கு பயன்படுத்த முடியும், என, விவசாயிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ