உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தரமற்ற குடிநீர் விற்பனை அமோகம் தடுக்க நடவடிக்கைக்கு கோரிக்கை

தரமற்ற குடிநீர் விற்பனை அமோகம் தடுக்க நடவடிக்கைக்கு கோரிக்கை

கோவை : தரமற்ற குடிநீர் விற்பனையை தடுக்க, உணவுப் பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. கோடைகாலத்தில், பாட்டில் குடிநீர், கேன் குடிநீர் விற்பனை சூடுபிடிக்கும். இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் ஒரு சில குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள், சுகாதாரமின்றி தரமற்ற குடிநீரை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்கின்றன. குடிநீரின் தரத்துக்கான அளவை, சுகாதார துறை நிர்ணயித்துள்ளது. இந்த அளவுகளில் ஒன்றைக் கூட பின்பற்றாமல், தரமற்ற குடிநீர் விற்பனை செய்யப்படுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் கூறுகையில்,''குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் தொடர் ஆய்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்ட், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், விற்பனை செய்யப்படும் குடிநீர் பாட்டில்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறப்புக்குழு ஏற்படுத்தப்பட்டு, சோதனை நடத்தப்பட உள்ளது. குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. தரமற்ற குடிநீர் விற்பனை செய்வோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை