தோட்டங்களுக்கு வழி விட்டு தடுப்பு அமைக்க கோரிக்கை
சோமனூர்;கணியூர், கரவழி மாதப்பூர் வழியாக செல்லும் ரயில் ரோட்டின் இரு புறங்களிலும் இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணியில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதனால், அப்பகுதிகளில் உள்ள தோட்டங்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து இரு கிராம மக்கள் மற்றும் கணியூர் ஊராட்சி தலைவர் வேலுசாமி, ஜெயக்குமார், ஜீவானந்தம் ஆகியோர் எம்.பி., கணபதி ராஜ்குமாரிடம் அளித்த மனு விபரம்:ரயில் ரோட்டின் இரு புறமும் தடுப்புகள் அமைத்தால் தோட்டங்களுக்கு செல்ல முடியாது. ரயில்வே கேட் மூடப்பட்டால், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், தொழிலாளர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். அதனால், தோட்டங்களுக்கு செல்லும் பாதைகளுக்கு வழி விட்டு, இரும்பு தடுப்புகளை அமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.