உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நான்கு வார்டுகள் நகராட்சியுடன் இணைக்க தீர்மானம்

நான்கு வார்டுகள் நகராட்சியுடன் இணைக்க தீர்மானம்

மேட்டுப்பாளையம்;சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட, நான்கு வார்டுகள், மேட்டுப்பாளையம் நகராட்சியுடன் இணைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் நகராட்சி எல்லை அருகே, சிக்கதாசம்பாளையம், ஓடந்துறை, தேக்கம்பட்டி, ஜடையம்பாளையம், ஆகிய நான்கு ஊராட்சிகள் உள்ளன. தமிழக அரசு, நகராட்சிகளை விரிவாக்கம் செய்ய அறிவித்துள்ளது. நகராட்சி எல்லை அருகே உள்ள, ஊராட்சிகள், பேரூராட்சி பகுதிகளை சேர்க்கும் படியும் அறிவித்துள்ளது. மேட்டுப்பாளையம் நகராட்சி எல்லை அருகே குடியிருக்கும், சிக்கதாசம்பாளையம் ஊராட்சியை சேர்ந்த மக்கள், தங்கள் பகுதிகளை நகராட்சியுடன் இணைக்கும் படி கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் சிக்கதாசம் பாளையம் ஊராட்சி மன்ற கூட் டம் தலைவர் விமலா தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் வினோத்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மேட்டுப்பாளையம் நகராட்சியை ஒட்டியுள்ள, சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட, 10, 11, 12 மற்றும் 13 ஆகிய நான்கு வார்டுகளில் உள்ள, எத்திராஜ் நகர், மாதையன் லேஅவுட், பாயப்பனூர், ஆசிரியர் காலனி, ராஜீவ் நகர், சுதந்திராபுரம், சேரன் நகர் ஆகிய பகுதிகளை, நகராட்சியுடன் இணைப்பதற்கு மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து வார்டு உறுப்பினர்களும், ஒப்புதல் அளித்து தீர்மானத்தில் கையொப்பமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி