உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுகாதார நிலைய வளாகம் சுத்தமானதால் நிம்மதி

சுகாதார நிலைய வளாகம் சுத்தமானதால் நிம்மதி

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, அரசம்பாளையம் ஊராட்சியில் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். கடந்த ஆண்டு 38.95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிதாக அரசு துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது.கட்டடத்தின் சுற்றுப்பகுதி முழுவதும் பார்த்தீனிய செடிகள் முளைத்து, புதர் போல் காட்சியளித்தது. இதை தொடர்ந்து கிராம மக்கள் பலர் இந்த துணை சுகாதார நிலையம் செல்வதை தவிர்த்து, கிணத்துக்கடவு அரசு மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.இதுபற்றி, 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. செய்தி எதிரொலியாக, சுகாதார நிலைய பணியாளர்கள் வலியுறுத்தியதன் பேரில், ஊராட்சி துாய்மை பணியாளர்களால் துணை சுகாதார நிலையத்தை சுற்றிலும் வளர்ந்து இருந்த, பார்த்தீனிய செடிகள் அகற்றப்பட்டு, வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை