உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரைஸ் புல்லிங் இரிடியம் ரூ. 5 லட்சம் மோசடி

ரைஸ் புல்லிங் இரிடியம் ரூ. 5 லட்சம் மோசடி

கோவை: ரைஸ் புல்லிங் இரிடியம் விற்பனை செய்து பணம் தருவதாக கூறி மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். வடவள்ளி, ஸ்ரீ சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன், 62. தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு சென்னை போரூரை சேர்ந்த சுவாமிநாதன், 52 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சுவாமிநாதன், சென்னையில் ஸ்ரீ காமாட்சி கருணை இல்லம் நடத்தி வந்துள்ளார். மேலும், ஒரு நிறுவனத்தையும் நடத்தி வந்துள்ளார்.இந்நிலையில், சுவாமிநாதன் தனது நிறுவனத்தில் முதலீடு செய்யுமாறு முருகேசனிடம் கேட்டுள்ளார். இதையடுத்து இருவரும், கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் மருதமலையில் சந்தித்தனர். அப்போது, தன்னிடம் 'ரைஸ் புல்லில் இரிடியம்' இருப்பதாகவும், அதை இங்கிலாந்தில் உள்ள நிறுவனத்திற்கு ரூ.2.25 லட்சம் கோடிக்கு விற்பனை செய்யப்போவதாகவும் சுவாமிநாதன் தெரிவித்தார். மேலும், இரிடியம் விற்பதன் மூலம் 20 சதவீதம் லாபம் கிடைக்கும் எனவும் தெரிவித்தார். மேலும், ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால், ஒரு கோடி திருப்பி தருவதாக ஆசை காட்டியுள்ளார். இதை நம்பிய முருகேசன் ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். சுவாமிநாதன் பணத்தை திருப்பிக்கொடுக்கவில்லை. இதையடுத்து, முருகேசன் அளித்த புகாரின் பேரில் வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை